தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன்... உங்கள் ராசிக்கு எப்படி..? - Aries to Pisces

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 20, 2022, 6:37 AM IST

மேஷம்:நீங்கள், இன்று உங்களுக்கான நேரத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அதனால், சரியான வகையில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணியிடத்தில் சிறிது ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எனினும், மாலையில் நேரத்தை சந்தோஷமாக கழிப்பதற்காக, கேண்டில் லைட், ரோஜா பூக்கள், இசை எனப் பலவித ஏற்பாடுகளை செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, புதிய வர்த்தக திட்டங்கள் தொடர்பாக, உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கு நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலும் போகக்கூடும். அதனால், ஏற்படும் மன அழுத்தத்தை போக்க, காதலியுடன் விருந்திற்கு ஏற்பாடு செய்யவும்.

மிதுனம்:உங்களது கோப உணர்வு மற்றும் விரோதப் போக்கின் காரணமாக பாதிப்பு ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும் நீங்கள் செய்த தவறுகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம். உங்கள் பணியிடத்திலிருந்து நல்ல செய்தி காத்திருக்கிறது.

கடகம்:உங்களது நேர்மறையான மற்றும் புத்திசாலித்தனமான அணுகுமுறை, உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்களை கொடுக்கும். நீங்கள் உங்களுக்காக நேரத்தை செலவிட்டு ஆளுமைப் பண்புகளையும் செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்ள விரும்புவீர்கள். வீட்டு அலங்காரத்தில், சில மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்: உங்களது முக்கியத்துவம் மற்றும் செயல்திறனை குறைத்து மதிப்பிடுவது நல்லதல்ல. எந்தவிதமான புதிர்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. அதனால், அந்தத் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். இதன் காரணமாக வர்த்தகத் துறையில், மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவீர்கள்.

கன்னி: இன்று உங்களது கற்பனைத் திறன் அதிகம் இருக்கும். ஆண்டாண்டு காலமாக நீங்கள் பாதுகாத்து வந்த பொருட்களை நினைத்து பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் வீட்டை பொருத்தமான வகையில் மர சாமான்கள் அல்லது கலைப் பொருட்களால் அலங்காரம் செய்வீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு மிகப் பிரகாசமான நாளாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை கழிப்பீர்கள். இன்று மாலை உங்களுக்கு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதனால் செலவுகளும் அதிகரிக்கும்.

விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கான பணிகளை செய்வதில் ஆர்வமாக இருப்பீர்கள். வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக, அதிக நிதியை திரட்ட வேண்டிய தேவை இருக்கும். எனினும், இன்றைய நாளின் இறுதியில் நண்பர்கள் மட்டும் குடும்பத்தினருடனான உறவுகள் வலுப்படும்.

தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது முக்கியம் ஆகும். உங்களது குறிக்கோள் மற்றும் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களை ஊக்கத்துடன் மேற்கொண்டு, மேலும் முன்னேறி செல்வீர்கள்.

மகரம்: இன்று ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்’ என்பது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கும். குடும்பத்தினரிடமிருந்து பெறும் ஆதரவு காரணமாக, வீட்டை நீங்கள் சிறந்த வகையில் அலங்கரிக்கலாம். குடும்பத்தின் ஆதரவு காரணமாக, நீங்கள் இந்த உலகையே வெல்வீர்கள்.

கும்பம்:இன்று உங்களுக்கு பிரகாசமான நாளாக உள்ளது. அனைவரின் பாராட்டு மற்றும் புகழ்ச்சி காரணமாக, நீங்கள் பணியில் மேலும் சிறந்து விளங்குவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் வேலையை பார்த்து திருப்தி அடைவார்கள். எனினும், உங்களது பணியில் உங்களுக்கு திருப்தி இருக்காது. நிதானமாக செயல்படவும்.

மீனம்: இன்று உங்களுக்கு குதூகலம் மற்றும் உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். தொலைவில் இருந்து நல்ல செய்தி வரக்கூடும். தொழில் துறையை பொருத்தவரை, நெடுநாட்களாக முடிக்கப்படாமலிருந்த பரிவர்த்தனை முடிக்கப்படும். இன்று வர்த்தகம் தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா? சுப்புலட்சமி ஜெகதீசன் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details