மும்பை:சிவசேனா கட்சியைச் சேர்ந்த 16 சட்டப்பேரவை உறுப்பினர்களை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் பதவி நீக்கம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 சட்டப்பேரவை உறுப்பினர்களும் அவர்களின் பதிலை வருகிற ஜூன் 27ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
இந்நிலையில்,"கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள்" மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிர முதலமைச்சரும் கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தை சிவசேனாவின் தேசிய செயற்குழு சனிக்கிழமை நிறைவேற்றியது. ஆனால் கிளர்ச்சிக்குக் காரணமான ஏக்நாத் சிந்தே மீது நடவடிக்கை எடுக்க தவறியது.
மேலும், செயற்குழுவில், எந்தக் கட்சிக்கும் சிவசேனாவின் பெயரையோ அதனை நிறுவியத் தலைவரான பால் தாக்ரேயின் பெயரையோ பயன்படுத்தக்கூட்டாது என உறுதிமொழி வெளியிடப்பட்டது. குவஹாத்தியில் முகாமிட்டுள்ள ஷிண்டே கோஷ்டியினர் கூறியது போல, சிவசேனா என்ற பெயரையும், அதன் நிறுவனர் மறைந்த பால்தாக்கரேவின் பெயரையும் வேறு எந்த அரசியல் அமைப்போ, பிரிவினரோ பயன்படுத்தக் கூடாது என, செயர்குழுவில் கூடிய நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
சிவசேனா (பாலாசாஹேப்) என்று தன்னைப் பெயரிட்டுக்கொண்டது. "சிவசேனா பால்தாக்கரேவுக்கு சொந்தமானது என்றும், இந்துத்துவா மற்றும் மராத்தி பெருமை பற்றிய அவரது கடுமையான சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளது என்றும் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சிவசேனா இந்தப் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாது" என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார். “கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரங்களையும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மகாராஷ்டிராவை வழிநடத்தியதற்காக முதல்வர் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவிப்பது உட்பட 6 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் பால்தாக்கரேவின் பெயரைப் பயன்படுத்தி வாக்குக் கேட்கக் கூடாது என்று தாக்கரே கூறியதையும் ராவுத் மேற்கோள் காட்டினார். "பாலாசாகேப் (தாக்கரே) மற்றும் சிவசேனா ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள், சிவசேனாவைத் தவிர, அவரது பெயரை யாரும் பயன்படுத்த முடியாது" என்று தீர்மானம் ஒன்று வாசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தெலுங்கு சங்க நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்பு