தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவமனை வளாகத்தில் பெண்ணிடம் அத்துமீறிய மூவர் கைது! - பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனை

டெல்லி: மருத்துவமனை வாகன நிறுத்தும் இடத்தில் பெண்ணிடம் மூன்று பேர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape
rape

By

Published : Nov 3, 2020, 6:27 PM IST

டெல்லியில் ரோகினி மாவட்டத்தில் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனை உள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, இந்த மருத்துவமனைக்கு வந்த பெண்ணை, பாதுகாப்பு காவலர் ஒருவர், விவரங்கள் கேட்கும் சாக்கில் மருத்துவமனையின் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை இரண்டு நபர்களுடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர். கிடைத்த தகவலின்படி, பாதுகாப்பு காவலரும், மருத்துவமனையில் பவுன்சர்களாக பணியாற்றிய மூவரும் அப்பெண்ணிடம் தவறாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்திற்குப் பிறகு, பவுன்சர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆண் நண்பருக்கு எதிராக வழக்கு தொடரும் அமலாபால்...!

ABOUT THE AUTHOR

...view details