தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மற்றொரு லஷ்கர் -இ-தொய்பா பயங்கரவாதி கைது - வடக்கு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் டிவி நடிகை கொலையில் தொடர்புடைய இரு லஷ்கர் -இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பாரமுல்லாவில் அதே அமைப்பைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.

லஷ்கர் இ தெய்பா தீவிரவாதி கைது
லஷ்கர் இ தெய்பா தீவிரவாதி கைது

By

Published : May 28, 2022, 11:31 AM IST

ஜம்மு காஷ்மீர்: வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் ஆத்தூர க்ரீரி பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து இன்று (மே 28) சோதனையில் ஈடுபட்டனர். அதில் லஷ்கர் -இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டம் உள்பட இரு பிரிவுகளின்கீழ் க்ரீரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"சோதனையின்போது, தௌலத்புராவில் இருந்து ஆத்தூர பால நோக்கி சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் வருவதை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த நபர் ஓட முயன்றுள்ளார். இருப்பினும், காவலர்கள் அவரை மடக்கி பிடித்தனர்.

லஷ்கர் இ தெய்பா தீவிரவாதி கைது

விசாரணையில் அவர், ஷ்ரக்வாரா க்ரீரி பகுதியைச் சேர்ந்த முகமது சலீம் கான் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, 5 சுற்றுகள் சுடும் அளவிற்கான தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

முன்னதாக, அவந்திபோரா மாவட்டத்தில் உள்ள அகன்ஹன்சிபோரா பகுதியில் நேற்று முன்தினம் (மே 26) இரவு நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் டிவி நடிகை அம்ரீன் பட் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் லஷ்கர் -இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிவி நடிகை கொலையில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details