பெரோஷ்பூர் (பஞ்சாப்):இன்று(ஜன 5) காலை பதிண்டாவில் இறங்கியப் பிரதமர் மோடி, ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல நேரிட்டது.
மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக 15- 20 நிமிடங்கள் காரணமாக வானிலை சரியாவதற்காகக் காத்திருந்துள்ளார்.
மக்களின் தொடர் சாலை மறியல் போராட்டத்தால் பிரதமரின் கார் பயணம் பாலத்தில் நின்றது காத்திருப்பிற்குப் பிறகும் வானிலையில் எந்த மாற்றமும் காணப்படாததால் சாலை வழியாகத் தியாகிகள் நினைவகத்திற்குச் செல்லத் திட்டமிட்டார். இந்தப் பயணத்திற்கு ஏறத்தாழ 2 மணி நேரம் ஆகும். பஞ்சாப் காவல் துறையின் டிஜிபியிடம் இருந்து உரிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, தன் பயணத்தைத் தொடங்கினார், பிரதமர் மோடி.
பிரதமரின் பஞ்சாப் பயணம் மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் ரத்தானது தொடர்பான காணொலி 15 - 20 நிமிடங்கள் காரில் காத்திருந்த பிரதமர்:
தேசிய தியாகிகள் நினைவகத்திற்கு 30 கி.மீ. முன்பு பிரதமரின் கான்வாய் (பாதுகாப்பு வளையப் பாதை) ஒரு பறக்கும் பாலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தது.
பிரதமரின் பஞ்சாப் பயணம் மக்களின் சாலை மறியல் போராட்டத்தால் ரத்தானது தொடர்பான காணொலி இதனால், அந்தப் பறக்கும் பாலத்தில் பிரதமர் 15 - 20 நிமிடங்கள் வரை காரிலேயே காத்திருக்க நேரிட்டது. மேலும்,மறியல் நீடித்ததால் தன் பயணத்தை ரத்து செய்த பிரதமர்,மீண்டும் பதிண்டாவிற்குத் திரும்பினார்.
இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசு இந்த பாதுகாப்புத் தவறுதல் செயல் குறித்து நிச்சயம் விளக்கமளிக்க வேண்டும் என்றும்; பிரதமருக்கு நிகழ்ந்த இந்த பாதுகாப்புத் தவறுதலை நிச்சயம் உள்துறை அமைச்சகம் கவனத்தில் எடுத்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Sunday Lockdown in Tamil Nadu: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: மா.சுப்பிரமணியன்