தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லீக்கான பிரதமர் மோடியின் பாதுகாப்பு அறிக்கை - உளவுத்துறை அதிரடி விசாரணை! - PM modi Kerala visit

பிரதமர் மோடியின் கேரள சுற்றுப்பயணத்தின் போது மேற்கொள்ளப்பட வைத்திருந்த 49 பக்க விரிவான பாதுகாப்பு அறிக்கையை கசிய விட்டது தொடர்பாக உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PM Modi
PM Modi

By

Published : Apr 22, 2023, 2:02 PM IST

திருவனந்தபுரம் :பிரதமர் மோடி வரும் 24 ஆம் தேதி மாலை கேரளா செல்கிறார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக கேரளா செல்லும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடத்தப்படும் மாநாடு, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து திங்கட்கிழமை இரவு கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கும் பிரதமர் மோடி மறுநாள் கொச்சியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். தொடர்ந்து கேரளாவுக்கான வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

ரயில்வே துறைக்கான நான்கு திட்டங்கள், முடிவு பெற்ற திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் மோடியில் திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பிரம்மாண்ட மாநாட்டில் கலந்து கொண்டு பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கேரள சுற்று பயணத்தின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்த உள்ளதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாநில பாஜக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :ரூ.3 லட்சத்துக்கு பச்சிளம் சிசு விற்பனை - உண்மையான பெற்றோரை தேடும் போலீஸ்!

எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் ஜான் நடுமுத்தத்தில் என்ற பெயரில் கடிதம் அனுப்பட்டு உள்ளதாகவும், கடிதத்தில் உள்ள விலாசம் மற்றும் குறிப்பிடப்பட்டு உள்ள பெயர் குறித்து விசாரணை நடத்தி வருவதாவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அளித்த புகாரில், கேரள போலீசார் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியின் கேரள வருகையின் போது மேற்கொள்ளப்பட இருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை கசிய விடப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

உளவுத் துறையின் கூடுதல் காவல் துறை இயக்குனர் தலைமையிலான போலீசார் தயார் செய்த பாதுகாப்பு அறிக்கை கசிய விடப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் போடப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகளின் பெயர்கள் உள்ளிட்ட ரகசியத் தகவல்கள் கசிந்ததாக கூறப்படுகிறது.

விவிஐபி பாதுகாப்பு குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய 49 பக்க அறிக்கையை கசிய விடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும், புதிய பாதுகாப்பு அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரதமர் வருகை தரும் மாவட்டங்களில் உள்ள உயரதிகாரிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பாதுகாப்பு அறிக்கை கசிய விடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்! கேரளா பயணம் ரத்தாகுமா?

ABOUT THE AUTHOR

...view details