நாட்டின் கோவிட்-19 தொற்றுப் பரவல் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சக உயர் அலுலவர்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று (ஜூலை 8) நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை இணைச்செயலர் லவ் அகர்வால், உள்துறைச்செயலர் அஜய் குமார் பல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டாம் அலை ஓயவில்லை
ஆய்வுக்குப்பின் பேசிய லவ் அகர்வால், "நாட்டின் 80 விழுக்காடு கோவிட்-19 பாதிப்பு 90 மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளது. அதில் 14 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவை.
எனவே, வடகிழக்கு மாநிலங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாட்டில் இரண்டாம் அலை இன்னும் முழுமையாக ஓயவில்லை. எனவே, மக்கள் அலட்சியப் போக்கை கடைபிடிக்கக் கூடாது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.
தொற்றுப் பரவல் குறித்து பேசிய அஜய் குமார் பல்லா, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மாநில நிர்வாகங்கள் தேவைக்கேற்ப கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அத்துடன் தொற்று கட்டுப்பாடு நடவடிக்கை குறித்து வட கிழக்கு மாநிலங்கள் வாரந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:’தடுப்பூசியால் மீண்டும் பார்வை கிடைத்தது’ - மகாராஷ்டிராவில் பரவும் புரளி!