இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் அனுமதிக்கப்படுவர்.
அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை காலை 7 முதல் இரவு 8 மணிவரை மட்டுமே நடைபெறும். பெட்ரோல் பங்குகள், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 14 முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், இருப்பினும் ஹோம் டெலிவரிக்கு அனுமதி அளிக்கப்படும்.