தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே உயிரை விட்ட அலுவலர்! - கரோனா பரவல்

ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோதே உயிரிழந்தார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட கிராம செயலாளர் உயிரிழப்பு!
கரோனாவால் பாதிக்கப்பட்ட கிராம செயலாளர் உயிரிழப்பு!

By

Published : May 1, 2021, 5:31 PM IST

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் நாராயணர். இவர் மாவட்டத்தின் காண்டேபள்ளி மண்டலின் மல்லேபள்ளியில் கிராம செயலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த நான்கு நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுவந்தார். இருப்பினும் அவர் நேற்று (ஏப்.30) தனது அலுவலகத்திற்குச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அவர் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே உயிர் பிரிந்தது. இதனைக் கண்டு அலுவலர்கள் அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என எண்ணி அவரது அருகில் செல்ல தயங்கினர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்க்கு கரோனா இருப்பதை உறுதி செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details