புதுச்சேரி அரசு கடந்த 20 ஆண்டுகளாக கடற்கரை காந்தி சிலை அருகே இருந்து மூன்று கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடற்கரையில் கற்களைக் கொட்டி தடுப்புச் சுவர் அமைத்து கடல்சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுத்துவருகிறது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 15) பிற்பகல் வழக்கத்துக்கு மாறாக புதுச்சேரி கடல் பகுதி காணப்பட்டது, 100 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது. குறிப்பாக காந்தி சிலை பின்புறம் முதல் பழைய துறைமுகம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது.
புதுச்சேரி கடற்கரையில் 100 அடி தூரம் வரை உள்வாங்கிய கடல் நீர் - 100 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது
புதுச்சேரியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, அதனால் கடற்கரையில் உள்ள மணல் பகுதி காணாமல்போய் வருகிறது.
புதுச்சேரியில் கடற்கரையில் 100 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது
இதனால் மணல் பரப்பு அதிகளவில் தென்பட்டது, கடற்கரை வந்திருந்த மக்கள் இதனைப் பார்த்து காணொலி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர். இது நேற்று மாலை வரை நீடித்தது. இதனால் கடற்கரையில் சற்று பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க:ஊரடங்கு: புதுச்சேரி சுற்றுலாப் பகுதிகளில் 50% பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி