சிம்லா:தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இமாச்சல பிரதேச மாநில அரசு, பள்ளிக் கல்வித்துறைக்கு கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அதனடிபடையில், இமாச்சல பிரதேசத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
பள்ளிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விடுமுறை - பள்ளிகளுக்கு விடுமுறை
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
school leave from november
இதையடுத்து நவம்பர் 8ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் புதிய வகை கரோனா பரவி வருவதால், பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்படாலம் எனக் கூறப்படுகிறது.
முக்கிய செய்தியை படிக்க:3ஆம் அலை... 1 முதல் 8 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பில் மாற்றமா?