டெல்லி:சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் (CEO) சந்தா கோச்சர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் 5ஆம் தேதி சந்தா கோச்சரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சந்தா கோச்சர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷான் தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது எனவும், இது குறிப்பிட்ட தனியார் வங்கிக்கும், அதன் ஊழியருக்கும் இடையேயான விவகாரம் எனக் கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது.