தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது - உச்ச நீதிமன்றம் - சிவசேனா கட்சி வழக்கு

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனா என்று அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றம் மறுப்பு

By

Published : Feb 22, 2023, 5:35 PM IST

டெல்லி: மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதோடு கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் அவர்களுக்கே ஒதுக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், சிவசேனா கட்சி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக ஏக்நாத் ஷிண்டே தரப்பை அங்கீகரித்துள்ளது. இந்த வழக்கில், தீர்ப்பு வரும் வரை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு இன்று (பிப்.22) விசாரித்தது. அப்போது நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பெரும்பான்மையை நிரூபித்த தரப்புக்கு கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.

இந்த வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பில் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்தனர். மகாராஷ்டிராவில் 2022ஆம் ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் மற்றொரு தரப்பான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்களால் ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு பெரும்பான்மையை நிரூபித்து புதிய அரசாக பதவியேற்றது. அப்போதில் இருந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய 2 தரப்பும் கட்சிக்காக வழக்குகள் தொடுத்தும், தேர்தல் ஆணையத்தை நாடியும் வருகின்றனர்.

இதனிடையே ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியையும், அதன் சின்னமான கட்சியின் வில் அம்பையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த உத்தரவின் மூலம் ஷிண்டே தரப்புக்கு கட்சியின் சொத்துக்களும், ஆவணங்களும் சென்றுள்ளதால், உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரினார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த உத்தரவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவசேனா விவகாரத்தில் விதிகள் மற்றும் பெரும்பான்மையின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதேபோல அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும்பான்மையின் உடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அண்மையில் இரட்டை இலை சின்னம் பொதுக்குழுவில் எடுக்கும் முடிவின்படி ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும்பான்மையை நிரூபித்து சின்னத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதானி விமானத்தில் சொந்த வீடு போல் ஓய்வெடுக்கிறார் பிரதமர் மோடி - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details