தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசத் துரோக சட்டத்தை நீக்க கோரிய வழக்கு; 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்! - ETV Tamil

Supreme court of India: தேசத்துரோக சட்டம் 124ஏ பிரிவை நீக்க கோரிய வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

sc-on-challenge-to-validity-of-sedition-law
தேசத் துரோக சட்டத்தை நீக்க கோரிய வழக்கு; 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

By PTI

Published : Sep 12, 2023, 3:41 PM IST

டெல்லி: தேசத்துரோக சட்டம் 124ஏ பிரிவு சுகந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. எனவே அதை நீக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்கின் முந்தைய விசாரணைகளில், மனுதாரர்கள் தரப்பில் தேசத்துரோக சட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் பழிவாங்கப் பயன்படுத்துகின்றன என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குறைந்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கான ஆவணங்களை தலைமை நீதிபதி முன் வைக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை, மே மாதம் 1ஆம் தேதி மத்திய அரசு தரப்பில் தேசத்துரோக சட்டம் குறித்து மறுபரிசீலனையில் இருந்தது. மேலும் இந்த ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஐஐடி மெட்ராஸின் பேராசிரியருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது!

அதன்பின், ஆகஸ்ட் 11ஆம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 புதிய சட்டங்கள் குறித்து முன்மொழியப்பட்டன. அதில், இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC), பாரதிய நியாய சன்ஹிதா மசோதா என மாற்றி அமைக்கவும் அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை (CrPC), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா எனவும், இந்தியச் சாட்சிகள் (Indian Evidence Act) சட்டத்தை, பாரதிய சாக்ஷ்ய மசோதா என மாற்றி அமைக்கும் படி மசோதாக்களை மத்திய அரசு முன்மொழிந்து இருந்தன.

அதன்பின் 2023, மே 11ஆம் தேதி தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பித்து இருந்தது இதன்படி மத்திய மற்றும் மாநில அரசுகள் தேசத்துரோக சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்ய தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மனுக்கள் இன்று (செப்.12) மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், புதிய சட்டங்கள் தற்போது நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. எனவே, தேச துரோகச் சட்டம் குறித்த இந்த வழக்கினை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி அமர்வு மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து ஜந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:வீட்டு காவலுக்கு மாற்றப்படுகிறாரா சந்திரபாபு நாயுடு? விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details