டெல்லி: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 25ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, போலி ஆதாரங்களை வைத்து இந்த வழக்கை தொடர்ந்ததாக, முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார், மும்பையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனு அளித்தனர். அந்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் மனுகளைத் தொடர்ந்தனர். இந்நிலையில், இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூயூ லலித், நீதிபதி ரவீந்திர பட், நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செப். 2) விசாரணை மேற்கொண்டது.