தமிழ்நாடு

tamil nadu

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் - உச்ச நீதிமன்றம்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரம் இடைக்கால பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Jan 12, 2022, 1:12 PM IST

Published : Jan 12, 2022, 1:12 PM IST

Updated : Jan 12, 2022, 1:33 PM IST

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழ்நாடு பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் தங்களிக்கு அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை கடந்த டிசம்பர் 17ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி, ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மட்டும் கைது செய்ய அவசரம் காட்டுவது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்து, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராஜேந்திர பாலாஜி வெளியூர்களுக்கு செல்லக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:PM security breach: பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு

Last Updated : Jan 12, 2022, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details