டெல்லி:அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 18) தள்ளுபடி செய்தது. அதோடு மீண்டும் இந்த வழக்கை தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மனுதாரருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்த நிலையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஆகவே எடப்பாடி கே.பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நிலவும் போட்டி சூழல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பர நோக்குத்துடன் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆகவே, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த ரத்தை எதிர்த்து ஜோசப், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இந்த வழக்கு தேவையற்றது என்று உயர் நீதிமன்றம் அபதாரதத்துடன் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், மனுதாரர் மீண்டும் மேலமுறையீடு செய்தது கண்டிக்கத்தக்கது. இப்போது எவ்வளவு அபாராதம் விதிக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டுமா. இந்த வழக்கை மனுதாரர் மீண்டும் தொடரும்பட்சத்தில் மேலும் அபாதாரம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிப்பு தெரிவித்தும், அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செயக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில் ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லாது. அந்த 11ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே கட்யில் தொடரும்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்தே கூட்டத்தை கூட்ட வேண்டும். தனித்தனியாக கூட்டக்கூடாது. அப்படி இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தால் பொதுக்குழுவை கூட்ட ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது. இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்... ஓபிஎஸ்