டெல்லி:குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தின்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரது கண்முன்னே அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கில் 2008ஆம் ஆண்டு 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனிடையே தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து குஜராத் மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கூறியது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும் குஜராத் அரசால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, நவம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே டிச.13ஆம் தேதி அமர்வில் இருந்த நீதிபதி பெலா எம்.திரிவேதி விலகினார். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 17) நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பில்கிஸ் பானுவின் மறுஆய்வு மனு, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:‘பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் நன்னடத்தை காரணமாக விடுதலை அளிக்கப்பட்டது’ - குஜராத் அரசு