டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த இனக்கலவரம் தொடர்பாக, ,மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிய விரும்புகிறோம், புதுப்பிக்கப்பட்ட நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, அம்மாநில அரசிற்கு, உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 03ஆம் தேதி) உத்தரவிட்டு உள்ளது.
மணிப்பூர் அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மாநிலத்தில் நிலைமை "மெதுவாக இருந்தாலும்" மேம்பட்டு வருவதாக குறிப்பிட்டு உள்ளார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக, நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்த நிலையில், சிவில் போலீஸ், இந்திய ரிசர்வ் பட்டாலியன்கள் மற்றும் 114 நிறுவனங்களின் CAPF போன்றவை நிறுத்தப்பட்டு உள்ளதாக, மேத்தா ஆவணங்களை சமர்ப்பித்தார்,
நிலை அறிக்கையை வழங்குமாறு மேலும் "மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை மேத்தாவை, நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு, புதுப்பிக்கப்பட்ட விரிவான நிலை அறிக்கையை எங்களுக்குத் தரவும்" என்று, கேட்டுக் கொண்டார், திங்கட்கிழமைக்குள் விவரங்களை வழங்குவதாகக் கூறிய மேத்தா, ஊரடங்கு உத்தரவு 24 மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, " மறுவாழ்வு முகாம்கள், ஆயுதங்கள், சட்டம் ஒழுங்கு மீட்பு, என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எங்களுக்கு முறையான பிரமாணப் பத்திரம் கொடுங்கள் " என்று தெரிவித்து உள்ளது.
டெல்லியின் மணிப்பூர் பழங்குடியினர் அமைப்பின் வழக்கறிஞர் சத்ய மித்ராவின் உதவியோடு கோன்சால்வ்ஸ், உண்மை நிலை அறிக்கை மற்றும் கிராமம் வாரியாக நிகழ்ந்த கொலைகள் உள்ளிட்டவைகளின் சமர்ப்பித்ததாக தெரிவித்து உள்ளார். இங்கு . வன்கொடுமை குறைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில், அது தற்போது "இன்று 20ல் இருந்து 110 ஆக உயர்ந்துள்ளது" என்று கோன்சால்வ்ஸ் குறிப்பிட்டு உள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடியினரைக் கொல்லும் ஆயுதமேந்திய தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக கோன்சால்வ்ஸ் வலியுறுத்தினார், மேலும் அவர்கள் ஒரு செய்தி நிகழ்ச்சிக்கு வந்து, பழங்குடியின மக்களை அழிக்கப் போவதாகவும், குக்கிகளைக் கொன்று மலைகளில் இருந்து விரட்டுவதாக, அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை, யார் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை, ஒரு நபர் கூட கைது செய்யப்படவில்லை என்று கோன்சால்வ்ஸ் தனது வாதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
விரிவான வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் பிரதமரின் வீடு மீது ஆளில்லா விமானம் பறந்தது - விசாரணையை துவக்கியது போலீஸ்!