நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அருண் பரத்வாஜ், சஞ்சய் பன்சால் என்ற இரண்டு சிறப்பு நீதிபதிகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
நாடு முழுவதும் சுரங்க ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் பாரத் பராசர் என்ற சிறப்பு நீதிபதியை 2014ஆம் ஆண்டு நியமித்தது.
அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் தனக்கு அடுத்து நியமனம் செய்ய ஐந்து நீதிபதிகளின் பட்டியலை பரிந்துரை செய்தார்.