டெல்லி: இஸ்ரேல் நாட்டின் தனியாருக்கு சொந்தமான பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒன்றிய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் 300 பேர் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக பாரபட்சமற்ற சுதந்திர விசாரணை நடத்தக் கோரி மூத்தப் பத்திரிகையாளர்கள் என். ராம் மற்றும் சசி குமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் சூர்ய காந்திடம் முறையிட்டார். அப்போது, நாட்டின் குடிமகன்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டுள்ளனர்.