டெல்லி: கல்வி நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவிற்கு உள்ளே உள்ள மதுபான கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து புதுச்சேரி அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. புதுச்சேரி அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்ளுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016, 2017ம் ஆண்டுகளில் மதுபான கடைகள் அமைப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் 20 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் தொகை உள்ள நகரங்களில் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு உள்ளே மதுபான கடைகள் இருக்கக் கூடாது எனவும், அதே போல் மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டருக்கு உள்ளே மதுபான கடைகள் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது.
இதையும் படிங்க:பாலியல் வழக்கில் அந்தமான் மாஜி தலைமைச் செயலாளருக்கு வழங்கிய ஜாமீனுக்கு தடையில்லை!
இந்தாண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் மதுபான கடைகள் தொடர்பான வழக்கு ஒன்றினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் ரவிக்குமார் புதுச்சேரியில் கல்வி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 150 மீட்டருக்கு உள்ளாக இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
புதுச்சேரி அரசு கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் வெளியே மதுபான கடைகள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. எனவே 150 மீட்டருக்கு உள்ளாக இருக்கக்கூடிய மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிற்கு எதிராக புதுச்சேரி மாநில அரசு சார்பில் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு பட்டியலிடப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சில வழக்குகள் இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த வழக்குகளுடன் புதுச்சேரி மாநில அரசின் மறு சீராய்வு மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியல் இட உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஆணையத்தின் உத்தரவு பின்பற்றப்பட்டதா? காவிரி நீர் மேலாண்மை வாரியம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு