டெல்லி:இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு, பெற்றோரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இஷான் மிர்சா மாலிக்(4) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது உறவு பல ஆண்டுகளாக சுமூகமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே சானியா மிர்சாவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கடந்த சில நாட்ளுக்கு முன்பு, தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சானியா மிர்சா, "மிகக் கடினமான நாட்களில் என்னை மீட்டெடுத்த தருணங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.