தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவை எதிர்ப்போம் - விவசாய சங்கம் அறிவிப்பு - உத்தரப் பிரதேச மாநிலம்

வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளிடம் முறையிடப்போவதாக வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

Samyukt Kisan Morcha
Samyukt Kisan Morcha

By

Published : Oct 25, 2021, 9:26 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போலீஸ் காவலில் உயிரிழந்த அருண் நர்வார் என்பவரின் குடும்பத்தினரிடம் பாரதீய கிசான் யூனினன் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் பேசிய திகாயத் உயிரிழந்த அருணின் குடும்பத்தினருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். இந்த மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடைபெற வேண்டும்.

வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என விவசாயிகளிடம் முறையிடப்போகிறோன். தேர்தலில் எங்கள் அமைப்பு பாஜகவுக்கு எதிராகப் பரப்புரை செய்யும்.

அதேவேளை நாங்கள் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. அதேவேளை வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம்.

இதையும் படிங்க:IPL ஏலம் - இரு புதிய அணிகள் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details