சம்பல்: உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் தாலிப் ஹுசைன் என்பவர் கோழி கடை நடத்தி வருகிறார். கடந்த 3ஆம் தேதி, இந்து தெய்வங்களின் உருவம் பொறிக்கப்பட்ட காகிதத்தில் கோழிக்கறியை விற்பனை செய்ததாகவும், இதனால் தங்களது மத உணர்வு புண்பட்டுவிட்டதாகவும் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்து கடவுள்களின் உருவம் இருந்த காகிதத்தில் கோழிக்கறி விற்பனை - வியாபாரி கைது! - தாலிப் ஹுசைன் என்ற வியாபாரி கைது
உத்தர பிரதேசத்தில் இந்து கடவுள்களின் உருவம் இருந்த காகிதத்தில் கோழிக்கறி விற்பனை செய்ததற்காக தாலிப் ஹுசைன் என்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
sambhal
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக போலீசார் அந்த கடைக்கு சென்றபோது தாலிப் ஹுசைன் மற்றும் அவரது நண்பர்கள் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தாலிப் ஹுசைனை கைது செய்தனர்.
இதையும் படிங்க:வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை!