உத்தரப்பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது என ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தெரிவித்துள்ளது. இக்கோயில் கட்டுமானத்திற்கான ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டாலும், நன்கொடைகளை அறக்கட்டளையின் வழக்கமான கணக்கில் ஒப்படைக்க முடியும் என்று அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தணிக்கைப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் இத்தொகை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் கட்டுமானத்திற்கான நிதி, நன்கொடை வழங்குவதற்கான பொது உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ராய் முன்னதாகப் பாராட்டினார். மக்கள், எதிர்பார்த்ததைத் தாண்டி நான்கு மடங்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.