தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங் - மாட்டு மூத்திரம் கோவிட் வராது பாஜக எம்பி

மாட்டு மூத்திரத்தைத் தொடர்ந்து குடிப்பதால் தனக்கு ஒருபோதும் கோவிட் பாதிப்பு வராது என பாஜக எம்.பி. பிரக்யா சிங் பேசியுள்ளார்.

பிரக்யா சிங்
பிரக்யா சிங்

By

Published : May 17, 2021, 6:44 PM IST

சர்ச்சைப் பேச்சுகளுக்கு புகழ்பெற்ற பாஜக மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங் தாக்கூர், மீண்டும் ஒரு சர்ச்சைப் பேச்சில் சிக்கியுள்ளார். விழா ஒன்றில் பங்கேற்று பேசிய இவர், மாட்டு மூத்திரத்தை தான் தொடர்ந்து குடிப்பதால் தனக்கு ஒருபோதும் கோவிட் பாதிப்பு வராது எனத் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. ”காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே உண்மையான தேச பக்தன்” என்று பேசி சர்ச்சையில் சிக்கியவர் பிரக்யா தாக்கூர்.

கடந்த ஆண்டு முதல் அலையின்போதும் இவர் மாட்டின் மூத்திரத்தை பரிந்துரை செய்து விமர்சனத்திற்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேச மாநிலம், போபல் மக்களவை உறுப்பினரான பிரக்யா சிங், கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து: டிஆர்டிஓ அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details