தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொற்கோவிலில் இளைஞர் அடித்துக் கொலை! - சிரோமணி சமிதி

பொற்கோவிலில் குரு கிரந்த் சாஹிப்பை அவமதிக்க முயன்ற இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொற்கோவிலில் இளைஞர் அடித்துக் கொலை!
பொற்கோவிலில் இளைஞர் அடித்துக் கொலை!

By

Published : Dec 18, 2021, 9:00 PM IST

Updated : Dec 19, 2021, 6:21 AM IST

அமிர்தசரஸ்:பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளபொற்கோவிலை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக வெளியான தகவலின்படி, இளைஞர் ஒருவர் குரு கிரந்த் சாஹிப்பை அவமரியாதை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக சிரோமணி சமிதி ஊழியர்களால் அந்த இளைஞர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இருப்பினும் ஆத்திரமடைந்த பக்தர்கள் இளைஞரை அடித்துக் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் குரு கிரந்த் சாஹிப்பின் புனித நூல் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (டிசம்பர் 18) மாலை 6 மணியளவில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:22 வயது பெண்ணுக்கு தீ வைத்து இளைஞர் தற்கொலை முயற்சி

Last Updated : Dec 19, 2021, 6:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details