டெல்லி:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை இன்று (ஆக.20) சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தான் குறித்த பயனுள்ள கருத்து பரிமாற்றம் இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆப்கன் அரசியலில் நிலைமை மட்டுமல்லாது, இருநாடுகளுக்கும் இடையேயான நட்பு ரீதியான உறவுகளை வளர்ப்பது தொடர்பாக பேசினோம்" என கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முகம்மது பின் அப்துல்ரகுமான் பின் ஜாஸிம் அல் தானி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து விவாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆப்கனைவிட்டு வெளியேற 6,000 பேர் காத்திருப்பு - அமெரிக்கா