தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் 9,782 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையம் - கோடி ரூபாய்

ஜம்மு காஷ்மீரில் 9,782 கோடி ரூபாய் செலவில், இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையம் அமைக்கபட உள்ளது.

கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தியாவின் மிகப்பரிய யோகா மையம்
கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தியாவின் மிகப்பரிய யோகா மையம்

By

Published : Dec 12, 2022, 7:06 PM IST

உதம்பூர்(ஜம்மு - காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநிலம், மண்டலை கிராமத்தில் ரூ.9,782 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச யோகா மையத்தின் (IYC) கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய யோகா மையம் உதம்பூரின் செனானி தாலுகாவில் உள்ள மண்டலை கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது, இதன் கட்டுமானப் பணிகள் 98% நிறைவடைந்துள்ளன. இந்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகம் இந்த யோகா மையத்திற்காக ரூ.9,782 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த சர்வதேச யோகா மையத்தில் நீச்சல் குளங்கள், வணிக மாநாட்டு மையங்கள், ஹெலிபேடுகள், ஸ்பாக்கள், உணவு விடுதிகள் என நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி சோலாரியம், ஜிம்னாசியம் ஆடிட்டோரியங்கள், பேட்டரி மூலம் இயக்கப்படும் கார்கள், தியான உறைவிடங்கள் மற்றும் பலவற்றைக் கொண்ட குடிசை வடிவிலான லாட்ஜ் வசதிகளுடன் இந்த சர்வதேச யோகா மையம் தயாராகி வருகிறது.

மேலும் இதே பகுதியில், கத்ரா-வைஷ்ணோ தேவி சுற்றுலா பகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் பிற மேம்பாட்டிற்காக, புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்துதல் இயக்ககம் (பிரஷாத்) திட்டத்தின் கீழ் ரூ.52 கோடி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி மண்டலையில் உள்ள மையம் மற்றும் கத்ரா சுற்றுலா தளம் ஆகிய இரண்டும் மாநிலத்தின் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மும்பை கலவர வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் 30 வருடங்களுக்கு பின் கைது

ABOUT THE AUTHOR

...view details