ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் துங்கூரை சேர்ந்தவர் ஓபுலா அஜய். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அப்போது அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார்.
’அதிர்ஷ்டம் இப்டிதான் கதவ தட்டுமா..’ லாட்டரியில் அடித்த ரூ.30 கோடி..!
தெலங்கானாவை சேர்ந்த ஓட்டுநருக்கு லாட்டரியில் 30 கோடி ரூபாய் விழுந்துள்ளது.
’அதிர்ஷ்டம் இப்டிதான் கதவ தட்டுமா..’ லாட்டரியில் அடித்த ரூ.30 கோடி!
இதில் ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.30 கோடியாகும். இந்த பரிசை சற்றும் எதிர்பார்க்காத அஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பணத்தின் ஒரு பகுதியை தனது குடும்பத்துக்காகவும், மீதமுள்ள பணத்தை தனது சொந்த ஊரில் தொழில் செய்ய பயன்படுத்துவதாகவும் அஜய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கூலி வேலைக்குச் செல்வோரை குறி வைக்கும் லாட்டரி கும்பல் - கண்டுகொள்ளாத போலீஸ்?