ஹைதராபாத்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் சூப்பர் சொகுசு எலக்ட்ரிக் வாகனத்தை "ஸ்பெக்டர்" என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பாளர்கள், நல்ல எதிர்காலத்திற்கேற்ற வடிவமைப்பைக் கொண்ட வாகனத்தின் படத்தை வெளியிட்டனர். இந்த வாகனம் 2.5 மில்லியன் கிலோமீட்டர் ஓட்டப்பட்டு மிகவும் கடினமான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனை பணிகள் 2023ம் ஆண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் டெலிவரிகள் தொடங்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிறுவனம் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதையும் வெளியிடவில்லை, ஆனால் ஊகங்களின்படி இது ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம். ரோல்ஸ் ராய்ஸின் கூற்றுப்படி, ஸ்பெக்டர் ஒரு 'அல்ட்ரா லக்ஸரி எலக்ட்ரிக் சூப்பர் கூபே' மற்றும் இது ஒரு சிறந்த எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளிக்கிறது.