தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பால் முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மறைவு - முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

Ajit Singh
அஜித் சிங் மறைவு

By

Published : May 6, 2021, 12:59 PM IST

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜித் சிங்(82), நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏப்ரல் 20ஆம் தேதி கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைய, இன்று(மே.6) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அஜித்சிங், முன்னாள் பிரதமர் சரண்சிங் மகன் ஆவார். அவர் 1939 ஆம் ஆண்டு மீரட்டில் பிறந்தார். வி.பி.சிங், நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரது மகன் ஜெயந்த் சவுதரி மதுரா எம்.பி.யாக இருந்தார்.

பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில், " விவசாயிகளின் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை வகித்து திறமையாக செயல்பட்டவரை நாடு இழந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் குறிப்பில், "அஜித் சிங் ஏழை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன்களுக்காகப் போராடியவர் என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “அஜித் சிங்கின் அகால மரணம் துயரத்தை அளிக்கிறது, அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான அஜித் சிங் மறைவு செய்து வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு சார்பாக, குடும்பத்தினருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் " என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details