டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கரோனா, இன்புளுயன்சா மற்றும் பிற சுவாச பிரச்சினகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு தொற்றுக்கும் தனித்தனியாக பரிசோதனை மேற்கொள்வதை தடுக்க தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் விரிவான தொகுப்புகளை வழங்குவதாக தெரிவித்து உள்ளன.
இந்நிலியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சு கவுன்சில் நோய்த் தொற்று தடுப்புக்கான வழிகாட்டு முறைகளை அறிவித்து உள்ளது. அதில் இன்புளுயன்சா, கரோனா மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுத்தும் வைரஸ்கள், பொதுவாக இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இன்புளுயன்சா ஏ வகை வைரஸ் எச்3என்2 வைரசின் துணை வகையைச் சேர்ந்தது என்றும் தற்போது இந்த வகை வைரசால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கடந்த சில மாதங்களாக அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும், இந்தியா பொதுவாக பருவகால காய்ச்சலின் இரண்டு உச்சங்களைக் காண்கிபதாகவும் அதில் ஜனவரி முதல் மார்ச் வரை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய காலம் என வகுக்கலாம் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.