கொழும்பு(இலங்கை): இலங்கையில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியமானப் பொருட்களின் விலைவாசி உயர்வினால், அந்நாட்டு அரசைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இலங்கை அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவதாக நேற்று அறிவித்து இருந்தது.
இதனைத்தொடர்ந்து, இன்று (மே 09) கொழும்புவின் காலிமுகத்திடல் என்ற பகுதியில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையைக்கட்டுப்படுத்தும் விதமாக, இலங்கை அரசு ஊரடங்கு சட்டத்தை அப்பகுதியில் பிறப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய இடங்களில் இன்று முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில் போலீசார் ஊரடங்கு சட்டத்தினை பிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (மே 09) காலை ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அரசிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் போராட்டக்காரர்கள் உள்ள பகுதிக்கு சென்ற மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அங்குள்ளவர்களைத் தாக்க முயற்சித்து, காலிமுகத்திடலில் அமைத்து இருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றியுள்ளனர்.
இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் அப்போது ஒருவருக்கொருவர் கற்களை வீசித்தாக்குதலில் ஈடுபட்டதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். பின், அங்கு சென்ற இலங்கை காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாதவிதமாகப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அங்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவை, அங்குள்ள மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் காரிலிருந்து இறங்கவிடாமல் தடுத்து, அவரது காரின்மீது கற்களை வீசி வழியிலேயே திருப்பி அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இலங்கையில் கரோனா பெருந்தொற்றின் பாதிப்பிற்குப் பிறகு எரிபொருட்களின் தட்டுப்பாடு, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம், நாள் ஒன்றிற்கு 12 மணிநேர மின்வெட்டு, பொதுமக்களின் போராட்டம், இலங்கையின் நாணய மதிப்பு இழப்பு உட்பட்ட காரணங்களால் இலங்கையில் நாட்டுமக்கள் பெரும்பாலானோர் செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மக்களின் போராட்டக் களத்திற்குச்சென்று அசம்பாவிதங்களை ஏற்படுத்திவருவது அங்கு மேலும் பரபரப்பை அதிகரிக்க செய்து வருகிறது. இதனால், தொடர்ந்து கொழும்பு தலைநகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இலங்கையில் தீவிரமடையும் போராட்டம் இதையும் படிங்க: பதவி விலகுகிறார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச?