டெல்லி: அக்னிபாத் திட்டம் தொடர்பாக இந்திய விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி வீடியோ தகவல் வெளியிட்டுள்ளார். அதில், "அக்னிபாத் திட்டத்தின் மூலம் விமானப்படையில் சேர்வதற்கான வயது வரம்பு 17.5 முதல் 21 வரை இருந்தது. இந்த வரம்பு தற்போது 23ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அக்னிபாத் திட்டம் - விமானப் படையில் வரும் 24ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு! - விமானப் படையில் வரும் 24ம் தேதி முதல் ஆள்சேர்ப்பு
அக்னிபாத் திட்டத்தின் மூலம் விமானப்படையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை வரும் 24ஆம் தேதி தொடங்கும் என இந்திய விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
upper age
இது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் விமானப் படையில் ஆள்சேர்ப்பு நடவடிக்கை வரும் 24ஆம் தேதி தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்திற்கு டிசம்பர் முதல் பயிற்சி ஆரம்பம்- ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே