தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள் - 157 கலைப்பொருட்கள்

அமெரிக்க அரசு ஒப்படைத்த இந்தியாவுக்குச் சொந்தமான 157 கலைப்பொருட்களுடன் பிரதமர் மோடி இன்று (செப். 26) இந்தியா திரும்பியுள்ளார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்
பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்

By

Published : Sep 26, 2021, 6:14 PM IST

டெல்லி: அமெரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து பிரதமர் மோடி இன்று(செப்.26) டெல்லி திரும்பினார். பொதுமக்கள், பாஜக தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பாலம் விமான நிலையத்தில் வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், இந்தியா திரும்பிய மோடி, அமெரிக்க அரசு அவரிடம் ஒப்படைத்த இந்தியாவுக்குச் சொந்தமான 157 கலைப்பொருட்களையும் இன்று கொண்டு வந்தார்.

12ஆம் நூற்றாண்டு நடராஜர் சிலை:

இந்து மதம் சார்ந்த 60 சிலைகள், 16 புத்த மத சிலைகள், 9 சமணம் சார்ந்த சிலைகள், மீதம் உள்ள பொதுவான கலைப்பொருட்கள் என மொத்தம் 157 கலைப்பொருட்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில், 12ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல நடராஜர் சிலையும் அடங்கும்.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், "தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பிகார் போன்ற இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திருடப்பட்ட பழங்காலப் பொருட்களும் இதில் அடங்கியுள்ளன'' என்றார்.

இதையும் படிங்க: 'பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக பயன்படுத்தும் நாடுகளை எதிர்க்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details