புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவைக் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. சட்டப்பேரவையைக் கூட்டுவதால் மக்களுக்கு பயன் உள்ளதா? மாநிலத்தில் மோசமான சூழல் நிலவுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் எதையும் மாநில அரசு செயல்படுத்தவில்லை, எதற்கு எடுத்தாலும் ஆளுநர் மீது முதல்வர் குற்றம்சாட்டி வருகிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் அரசியல் நாடகம் - ரங்கசாமி - சட்டப்பேரவைத் தேர்தல்
புதுச்சேரி: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவது அரசியல் நாடகம் என்று அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விமர்சித்துள்ளார்.
ரங்கசாமி
பல்வேறு அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் மாநில அந்தஸ்து மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வருகின்றனர். இது அரசியல் நாடகம்" என்றார்.