ஆண்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பித்து கரீபியன் தீவு நாடான ஆண்டிகுவா மற்றும் பார்படாஸ் நாட்டில் குடிபெயர்ந்தார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதனிடையே, ஆண்டிகுவாநாட்டில் லஞ்சம் கொடுத்து தனக்கான பாதுகாப்பை மெகுல் சோக்சி பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியகி உள்ளது.
பிரபல நிதிக் குற்ற ஆய்வாளரான கென்னத் ரிஜோக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆண்டிகுவா அரசின் போலீசார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மெகுல் சோக்சி நாடு கடத்தலை தவிர்த்துவருகிறார். இதனால் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பெரும் பின்னடை ஏற்பட்டுள்ளது. ஆண்டிகுவாவின் மூத்த காவல்துறை அதிகாரி அடோனிஸ் ஹென்றி உதவி உடன் நீதிமன்ற நடவடிக்கைகளை தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.