காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கோரி, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்' செய்தி வந்திருக்கிறது; இது முற்றிலும் தவறான செய்தி.
ராகுல் காந்தி ஈபிஎஸ் உடன் தொலைபேசியில் பேசியதாக வெளியான செய்தி தவறானது - ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு! - ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக வெளியான செய்தி தவறானது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Jairam Ramesh
அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நிகழவே இல்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்தி அதை வலுவிழக்கச் செய்யும் இதுபோன்ற மோசமான முயற்சியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாகவே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த பரிசீலனை?!