உலக அதிசயங்களில் ஒன்றும், காதல் சின்னமுமான தாஜ்மஹாலின், நான்கு மினார்களில், தென்மேற்கு மினாரில் கற்கள் சேதமடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், தாஜ்மஹாலின் மராமத்து வளர்ச்சி பணிகள் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த்குமார் ஸ்வர்ணக்கர் (ஏ.எஸ்.ஐ) மேற்பார்வையில் தொடங்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர் வசந்த்குமார் ஸ்வர்ணக்கர் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "தாஜ்மஹாலின் தென்மேற்கு மினாரின் பழுதுபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மழைநீர் மினாரின் உள்ளே நுழைவதால் 15 கற்கள் மோசமடைந்துள்ளன. கற்கள் மாற்றப்படும்.