குஜராத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து தனது சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆக்சிஜனை இலவசமாக மகாராஷ்டிராவுக்கு அனுப்ப தொடங்கியது.
முதலில் ஒரு நாளைக்கு 100 மெட்ரிக் டன் என்ற அளவில் உற்பத்திசெய்யப்பட்ட ஆக்சிஜன் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு நாளைக்கு 700 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டது.
இது மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்படுகிறது. தற்போது மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 1000 மெட்ரிக் டன் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவின் மொத்த மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் 11 விழுக்காட்டிற்கும் அதிகமான உற்பத்தியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் 15 ஆயிரம் மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்சிஜனை இலவசமாக வழங்கியது. இதன்மூலம் கிட்டத்தட்ட 15 லட்சம் கரோனா நோயாளிகள் பயனடைந்தாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இது தவிர ஆக்சிஜனைக் கொண்டுசெல்வதற்காக 24 ஐஎஸ்ஓ கன்டெய்னர்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு கூடுதலாக 500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து திறனை உருவாக்கப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.