தமிழ்நாட்டைப் போல் புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டுவந்தது. பல மாநிலங்களில் விலை குறைப்பைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவந்தன. இந்நிலையில், பெட்ரோல் மீதான 3 விழுக்காடு வாட் வரியைக் குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவுக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.43 குறைகிறது. கடந்த ஆறு மாதங்களில், இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை புதுச்சேரியில் குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ஆம் தேதி துணைநிலை ஆளுநர் ஆட்சியின்போது, முதன்முதலாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.