தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் தொடரும் கனமழை - 8 மாவட்டங்களில் ரெட் அலர்ட்! - கனமழை வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழப்பு

தெலங்கானாவில் கனமழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி வரை 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

Red alert
Red alert

By

Published : Jul 11, 2022, 4:48 PM IST

தெலங்கானா: தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், செகந்திராபாத், மஞ்சிரியாலா, பூபாலபள்ளி, பெடப்பள்ளி, ஜகித்யாலா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை வெள்ளத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

நிர்மல், நிசாமாபாத், ஜகித்யாலா, ஆசிபாபாத், பூபாலபள்ளி ஆகிய மாவட்டங்களில் இன்றும்(ஜூலை 11) நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கரீம் நகர், பெடப்பள்ளி, நல்கொண்டா, வாராங்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடிலாபாத், கொமரம் பீம் ஆசிபாபாத், மன்செரியல், நிர்மல், நிசாமாபாத், ஜகித்யாலா, பெடப்பள்ளி, பூபாலபள்ளி ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 13ஆம் தேதி வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் வரும் 13ஆம் தேதி வரை பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:தெலங்கானாவில் கனமழை: 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details