புதுடெல்லி:மெட்டா என்று அழைக்கப்படும் பேஸ்புக், கம்யூனிட்டி சாட்ஸ் (Community Chats) என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிக்கையில், “இதன் மூலம் பேஸ்புக் மெசெஞ்ஜர் மற்றும் பேஸ்புக் பக்கத்தின் மூலம் எழுத்து, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பேச முடியும். மேலும் பேஸ்புக் குழுக்களிலும் இதனை பயன்படுத்தி பேசலாம்.
ஒரு குறிப்பிட்ட குழுவின் அட்மின், ஒரு தலைப்பில் தொடர்பியலை தொடங்கும்போது, ஆர்வத்துடன் இருக்கும் அனைவரும் அதில் பங்கு பெற முடியும். அதேநேரம் ஒரே குழுவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடலை நிகழ்த்தலாம்.