தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் - Repo Rate unchanged

Repo Rate unchanged: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் 6.5 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 10:22 AM IST

Updated : Oct 6, 2023, 1:11 PM IST

டெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (அக்.6) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என தெரிவித்தார். மேலும், வீடு, வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டியிலும் மாற்றமில்லை எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இருமாத நாணயக் கொள்கையை இன்று (அக்.6) அறிவிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், “ரெப்போ வட்டி விகிதத்தை மாற்ற பணவியல் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்யாததால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, 6.50 சதவிகிதமாகவே 4வது முறையாகவும் ரெப்போ வட்டி விகிதம் தொடர்கிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழாக் காலங்கள் என்பதால், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தை 4 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரம், அடுத்த 2024 - 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாக உண்மையான ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. காய்கறி விலை உயர்வு, குறிப்பாக தக்காளி மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு ஆகியவற்றின் மூலம் பணவீக்கம் குறையும் என கணிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் போன்று பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல” - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Last Updated : Oct 6, 2023, 1:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details