கர்நாடகா மாநிலம் மைசூரில் கே.டி சாலை பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அப்பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக ஆல்கஹால் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது மட்டுமின்றி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை, பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறை, சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:குளிர்பானம் வாங்கித் தருவதாகக்கூறி சிறுமிக்குப் பாலியல் சீண்டல் - சாலையில் விட்டுச் சென்ற அண்ணன்