தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமோஜி பிலிம் சிட்டியில் சிறப்பு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கத் தயாரா? - விடுமுறை பேக்கேஜ்

Ramoji Film City: உலகப்புகழ் பெற்ற ராமோஜி பிலிம் சிட்டியில் சுற்றுலாப் பயணிகள் 2024ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ring-in-new-year-2024-with-a-bang-at-ramoji-film-city-in-hyderabad
ராமோஜி பிலிம் சிட்டியில் சிறப்பு புத்தாண்டு கொண்டாட்டம்.. நீங்களும் பங்கேற்கலாம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 10:21 PM IST

Updated : Dec 31, 2023, 11:41 AM IST

ஹைதராபாத்: உலகப் புகழ்பெற்ற ராமோஜி பிலிம் சிட்டியுடன் 2024ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடுங்கள். இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்புக் கொண்டாட்டங்களை ராமோஜி பிலிம் சிட்டி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலாப் பயணிகள் டிசம்பர் 31ஆம் தேதி 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான பார்ட்டிகளை தேர்வு செய்யலாம்.

நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களுடன் இந்த 2024ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை ராமோஜி பிலிம் சிட்டியில் கொண்டாட ரெட் வெல்வெட் பார்ட்டி மற்றும் த்ரில் பிளாஸ்ட் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு பிடித்தமான பார்ட்டியை தேர்வு செய்து, புத்தாண்டை கொண்டாட ஆர்எப்சி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ராமோஜி பிலிம் சிட்டியில் தங்கி விடுமுறைகளைக் கொண்டாட சிறப்பு பேக்கேஜ்களும் உள்ளன.

ரெட் வெல்வெட் பார்ட்டியில் சுற்றுலாப் பயணிகள் காலையில் ராமோஜி பிலிம் சிட்டியிலுள்ள சினிமா உலகைக் கண்டு ரசிக்கலாம். அதன் பின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், நேரலை நிகழ்ச்சிகள் பறவைகள் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல சுவாரஸ்ய விளையாட்டுகளை முடித்துவிட்டு, இரவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், பாலிவுட் நடனங்கள், டிஜே (DJ), சர்வதேச சண்டைக் காட்சிகள், ஃபயர் நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி உடன் உயர்தர இரவு உணவு மற்றும் பானங்களை அருந்தி, புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

த்ரில் பிளாஸ்ட் பார்ட்டியை (இரவு 8 மணி முதல்)தேர்வு செய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் இரவு, நேரடியாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகள், பாலிவுட் நடனங்கள், டிஜே, சர்வதேச சண்டைக் காட்சிகள், ஃபயர் நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடி உடன் உயர்தர இரவு உணவு மற்றும் பானங்களை அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9390008477, 9182730106 என்ற தொலைபேசி எண்களிலும் அல்லது 1800 120 2999என்ற கட்டணமில்லா எண்ணிலும் மற்றும்www.ramojifilmcity.com என்ற இணைய முகவரி மூலமாகவும் தங்களது விருப்பு பார்ட்டிகளை தேர்வு செய்யலாம்.

இதையும் படிங்க:புத்தாண்டின்போது சென்னையில் பட்டாசு வெடிக்க தடை.. பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Last Updated : Dec 31, 2023, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details