ராமேஸ்வரம் - ஹைதராபாத், செகந்திராபாத் - ராமேஸ்வரம் ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்களின் வண்டி எண்கள் 07686, 07685 என இருந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் - ஹைதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் வண்டியின் எண், 07696 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயிலின் வண்டி எண், 07695 என மாற்றம் செய்யப்பட்டு டிசம்பர் 28ஆம் தேதி வரை சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.