தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளை வலுப்படுத்தும் - ரமேஷ் பொக்ரியால் - புதிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளை வலுப்படுத்தும்

டெல்லி: புதிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளுக்கு வலு சேர்க்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பொக்ரியால்

By

Published : Jan 9, 2021, 6:29 AM IST

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "புதிய கல்விக் கொள்கை பிராந்திய மொழிகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கிடைக்க செய்யும். நாட்டின் தாய் மொழிகளுக்கு வலுச்சேர்க்கும்.

பிரதமர் மோடி கனவு காண்பது போல், எதிர்கால சந்ததியினர் அனைவரும் மொழி என்ற தடைக்கல்லை உடைத்து பிராந்திய மொழிகளில் படித்து பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் உருவெடுப்பார்கள்.

சிபிஎஸ்இ.,யின் கீழ் வரும் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ விரைவில் அமல்படுத்த அரசு முயற்சி எடுக்கும். உலகுக்கே மாதிரியாக எடுத்துச் செல்லப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details